• Jan 08 2026

தமிழ் நாட்டில் மொத்தமாக கவுந்த சலார் வசூல்! பெரும் தோல்விக்கு என்ன காரணம்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சலார். 

இப் படத்தின் முதல் பாகம் நல்லாவே இல்லை என்றும் அந்த படத்தின் கதை ரொம்பவே சொதப்பலாக உள்ளதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பியவாறு இருக்கின்றது.

பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிய நிலையில், இதன் முதல் நாள் வசூல் 178.5 கோடி ரூபாயை பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இப்படம் இதுநாள் வரை உலகம் முழுவதும் சுமார் ரூ 615 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 22 கோடி ரூபா தான் வசூல் செய்துள்ளது, சுமார் 100 கோடி வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement