• Jan 19 2025

இந்த நிகழ்ச்சிக்கு நீ ஏன் வந்த.. ’குக் வித் கோமாளி’ போட்டியாளரை அவமதித்தாரா கோமாளி?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சீனியர் கோமாளி ஒருவர் அந்த நிகழ்ச்சியின் இன்னொரு கோமாளியிடம் ’உனக்குத்தான் சீரியல் நன்றாக சென்று கொண்டிருக்கிறதே, அப்புறம் எதற்காக நீ இங்கு வந்தாய்’ என அவரை தவறாக அட்வைஸ் செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’குக் வித் கோமாளி’ சீசன் ஐந்து நிகழ்ச்சி பெரும் பிரச்சனைக்கு நடுவே ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் மற்ற சீசன்கள் போலவே இந்த சீசனுக்கும் பார்வையாளர்கள் நல்ல ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே,. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் இல்லாதது ஒரு குறையாக இருந்தாலும் சீனியர் கோமாளிகள் மற்றும் புதிதாக வந்த குக்குகள் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்கின்றனர் என்பதும் செஃப் தாமுவும் தனது பாணியில் காமெடி செய்து வருவதால் சிறிய சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. .

இந்த நிலையில் சீனியர் கோமாளி ஒருவர், சீரியல் நடிகை ஒருவர் கோமாளியாக வந்ததை பார்த்து ’எதற்காக நீ இங்கே வந்தாய், உனக்கு தான் சீரியல் நன்றாக சென்று கொண்டிருக்கிறதே, குக்காக வந்தால் கூட பரவாயில்லை, கோமாளியாக வந்து ஏன் காமெடி செய்து கொண்டிருக்கிறாய், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் உனக்கு உன்னுடைய சீரியல் வாழ்க்கை பாதிக்கப்படும்’ என்று அட்வைஸ் கொடுத்து வருகிறாராம்.



ஏற்கனவே இருவரும் நண்பர்கள் என்ற நிலையில் சீனியர் கோமாளி கொடுத்த அட்வைஸ் குறித்து அந்த சீரியல் நடிகை யோசித்து வருவதாகவும் விரைவில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

 மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே பொதுவாக குக்குக்களும் கோமாளிகளும் ஒரு குடும்பத்தை போல ஒற்றுமையாக இருப்பார்கள், ஆனால் இந்த சீசனில் தான் முதல் முறையாக பாலிடிக்ஸ் கிளம்பி இருப்பதாகவும் ஒருவரை ஒருவர் குறை சொல்வது அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் டிவி நிர்வாகம் இந்த சீசனை வெற்றிகரமாக கொண்டு செல்வதில் முனைப்பாக உள்ளது என்றும் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement