• Jan 19 2025

’சுந்தரி’ சீரியல் நடிகை தொடங்கிய பள்ளி.. என்ன சொல்லி கொடுக்கிறார் தெரியுமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’சுந்தரி’ சீரியலில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லா செலஸ் நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்கி இருப்பதாகவும் அதன் மூலமாக நடிக்க ஆர்வம் கொண்டு வரும் பல புதுமுகங்களுக்கு நடிப்பு சொல்லி தருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் பல வாரங்கள் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது என்பது தெரிந்ததே.

கருப்பாக கிராமத்தில் இருந்து வரும் பெண் பல அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்து எப்படி ஐஏஎஸ் படித்து முன்னேறுகிறார் என்ற கதை அம்சம் கொண்ட இந்த சீரியல் முதல் சீசன் கடந்த 2023 ஆம் ஆண்டு முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அழகர்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த  சீரியலில் கேப்ரில்லா செலஸ், ஜிஷ்ணு மேனன், ஸ்ரீ கோபிகா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் கேப்ரில்லா செலஸ் ஒரு பக்கம் நடிப்பை பார்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்கி உள்ளார். நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவர் தனது நடிப்பு பயிற்சி பள்ளியில் சொல்லித் தருகிறார் என்றும் இதற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

ஏற்கனவே சின்னத்திரைக்கு நடிக்க வரும் முன்பு முறைப்படி நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து அதன் பின்னர் தான் கேப்ரில்லா நடிக்க வந்தார் என்றும், தான் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே நடிப்பு பயிற்சி பள்ளியை அவர் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement