• Jan 19 2025

திரும்பிய பக்கமெல்லாம் கோடிகளை அள்ளும் ரிஹானாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் டாப் பாடகியான ரிஹானா கலந்து கொண்டு, பல்வேறு இந்தியர்களின் கவனத்தையும் பெற்றார்.

9 கிராமி விருதுகள், 12 பில்போர்ட் விருதுகள், 6 கீப்னஸ் கின்னஸ் சாதனைகள் என்று இசை உலகில் சாதனை படைத்தவர் தான் ரிஹானா. இவர் சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் இசை கலைஞர்களில் ஒருவராக உச்சத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், பல ஹாலிவுட் நடிகர்களின் சொத்து மதிப்பை விடவும் ரிஹானாவின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இசைக்கச்சேரி, கான்செப்ட்,  ஆடை நிறுவனம், விளம்பரங்கள், மாடலிங் என பல்வேறு வழிகளில் ரிஹானாவுக்கு வருமானம் கிடைக்கப் பெறுகின்றது.


2010ஆம் ஆண்டு ரிஹானாவின் வருமானம் சுமார் 745 கோடியாக  காணப்பட்டது.  2013 டைமண்ட்ஸ் வேர்டு டூர் மூலமாக அவரின் சொத்து 1100 கோடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் எமினம் உடன் இணைந்து  பங்கேற்ற இசை நிகழ்ச்சிகளின் மூலமாக மட்டும் 298 கோடி ஊதியமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து Fenty Beauty என்ற அழகு சாதன விற்பனை தொழிலையும் ஆரம்பித்தார். இதன் தரப்பில் 4 ஆயிரம் கோடி அளவிற்கு வருமானம் 2018ல் கிடைத்துள்ளது.

இதையடுத்து X Fenty என்ற ஆடை விற்பனை தொழிலையும் தொடங்கி அதிலும் வெற்றி பெற்றார். அதன் சந்தை மதிப்பு மட்டும் 2238 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

அது மட்டும் இன்றி 152 மில்லியனாக காணப்படும் ரிஹானாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடப்படும் ஒவ்வொரு  பதவுக்கும் 7 கோடி வழங்கப்படுகிறதாம்.

ஆக மொத்தம் ரிஹானாவின் சொத்து மதிப்பு சுமார் 11 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement