சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசாக இருக்கும் பராசக்தி திரைப்படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே இந்த படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் அவருக்கு 25 வது படமாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டவர்கள் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் சிவகார்த்திகேயனுடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை சினிமா வட்டாரங்களில் காணப்படுகிறது. ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அவருடைய மார்க்கெட்டை உயர்த்தி இருந்தது.

தற்போது சென்சார் சான்றிதழ் விவகாரம் பராசக்திக்கும் தலை தூக்கி உள்ளது. அப்படத்திற்கு சென்சார் நடைமுறைகள் முடிந்து விட்டதாகவும் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் படம் குறித்த தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்த படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழை அதிகாரிகள் கொடுக்கவில்லையாம். அவர்கள் அந்த படத்திற்கு மாற்றங்களை செய்ய சொன்னதாகவும், அதன்படி படத்தை படக் குழுவினர் மறு ஆய்வு செய்து அனுப்பியதாகவும், இருப்பினும் சான்றிதழ் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பராசக்தி படத்திற்கும் இன்னும் சான்றிதழ் வராததால் அந்தப் படமும் பத்தாம் தேதி ரிலீஸ் இருந்து தள்ளி போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயகன் படத்தை இரண்டு முறை பார்த்தும் சென்சார் அதிகாரிகள் அதற்கான சான்றிதழை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!