• Aug 24 2025

கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் – வசூலில் சாதனை..!

luxshi / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கிய நடிகர் விஜயகாந்த்தின் திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


நடிகர் விஜயகாந்தின் 100வது படமாக 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன், அவர் மறைவிற்கு பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.


ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் அப்போது மாபெரும் வெற்றியை பெற்றது. 

பொதுவாக 100ஆவது படம் தோல்வியடையும் என்ற விமர்சன கண்ணோட்டங்களை முறியடித்து, விஜயகாந்தின் வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது கேப்டன் பிரபாகரன்.


மேலும், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே விஜயகாந்தின் மகன் பிறந்ததால் அவருக்கு பிரபாகரன் என்று பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போது, சுமார் 1000 திரையரங்குகளில் ரீ ரிலீஸாக வெளியான இப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 


அதன்படி முதல் நாள் சுமார் 46 லட்சம் வசூல் ஆகியுள்ளது. இரண்டாவது நாளான நேற்று இப்படத்தின் வசூல் இரு மடங்கு ஆகியுள்ளது. அதன்படி ரூ.86 லட்சம் வசூலை பெற்று ரசிகர்களின் அமோக ஆதரவுடன் பட்டையை கிளப்பி வருவதாகவும் திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement