தென்னிந்திய திரையுலகின் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்தான் “LIK" என்கின்ற லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.
இந்த திரைப்படமானது எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும், செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை டி. முத்துராஜ் செய்துள்ளார்.
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து, உலகளவில் வெளியிடுகிறார்.
ஏற்கனவே வெளியான “தீமா தீமா” பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 27ஆம் திகதி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே புதுமையான கதைக்களத்துடன் வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!