பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், கோபி ஈஸ்வரியிடம் ராதிகா விவாகரத்து வேண்டும் என்று சொன்ன விஷயத்தையும், அங்கு பாக்யா வந்த விஷயத்தையும் சொல்லுகின்றார்.
மேலும் தான் பாக்யாவுக்கு செய்த துரோகம் அப்படியே கண்முன் வந்தது. நாம செய்த கர்மா எங்களுக்கே வரும் என்பது உண்மைதான். பாக்யாவை நான் கஷ்டப்படுத்தி விட்டேன் என ரொம்பவும் மனம் விட்டு பேசுகின்றார்.
அதன் பின்பு ஈஸ்வரி ராமமூர்த்தியின் படத்திற்கு முன்னால் சென்று கோபி உடைய வாழ்க்கையில் ராதிகா வந்ததும் நல்லதுக்கு தான். அப்படி இல்லை என்றால் பிடிக்காத வாழ்க்கை என்று இருந்திருப்பான்.
ஆனால் இப்போ பாக்கியாவை பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ளான். இனிமேல் பாக்யாவை நன்றாக கவனிப்பான். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என ராமமூர்த்தி மீது சத்தியம் பண்ணுகின்றார்.
இதை தொடர்ந்து எட்டு மாதங்கள் கழித்து பாக்கியா அதிரடியாக ரெடியாகின்றார். அவர் எழிலின் பட ப்ரமோஷனுக்கு செல்ல தயாராகின்றார். இதன்போது கோபியும் ஈஸ்வரியும் இனியாவும் செல்கின்றார்கள்.
அங்கு முதலில் ஜெனியும் செழியனும் எழிலின் பட ப்ரமோஷனுக்கு செல்கின்றார்கள். அதன் பின்பு வந்த கோபி செழியனுக்கு கைகளை கொடுத்து கண்கலங்க, எழிலும் அவரைக் கட்டி அணைத்து கொள்ளுகின்றார். இதனால் கோபி ஆனந்த சந்தோசத்தில் கண்கலங்குகின்றார். இதை பார்த்து ஈஸ்வரியும் சந்தோஷப்படுகிறார், இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!