சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், மீனா மண்டப ஆர்டரை சிறப்பாக எடுத்து முடிப்பதற்காக முத்து மாலையுடன் வந்து அவருக்கு அணிவித்து சந்தோஷப்படுகிறார். இதை பார்த்த விஜயாவும் ரோகிணியையும் முகம் சுழித்துக் கொள்கின்றார்கள்.
அதன் பின்பு முத்துவை கிச்சனுக்கு அழைத்துச் சென்ற மீனா, அங்கு அத்தைக்கு உடம்புக்கு ஒன்றுமே இல்லை.. அவர் நாடகம் ஆடி இருக்கின்றார்.. இதுக்கெல்லாம் காரணம் சிந்தாமணி தான் என்ற உண்மையை சொல்லுகின்றார்.. இதைக் கேட்ட முத்து இதனை சும்மா விட கூடாது என்று விஜயாவை கேள்வி கேட்கின்றார்..
அண்ணாமலையும் முத்து சொல்வது உண்மையா? எதற்காக இப்படி பண்ணினாய்? வயதுக்கு ஏற்ற மாதிரி இருக்க மாட்டியா? என திட்டுகிறார். தான் தவறு செய்ததால் விஜயா வாய் திறக்காமல் மௌனமாக இருக்கின்றார். அதன் பின்பு முத்து டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்க போவதாகவும் அதற்காக வீட்டு வாசலில் போர்டு வைக்கப் போவதாகவும் சொல்லுகின்றார்.
இதை கேட்ட விஜயா எனது வீட்டு வாசலில் எதுவும் வைக்க வேண்டாம் என்ன சொல்கின்றார். அதற்கு அண்ணாமலை ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உனக்கு பொறுக்காதே.. இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்குது என்று முத்துவை டிரைவிங் ஸ்கூலை ஆரம்பிக்குமாறு சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து மண்டப ஆர்டரில் கிடைத்த காசை முத்துவிடம் மீனா கொடுக்க அடுத்த நாள் அவருடைய பெயரில் பேங்க் அக்கவுண்ட் தொடங்குகிறார் முத்து. இதை பார்த்து விஜயா வயிறெரிந்து கொள்ளுகின்றார்.
மேலும் மீனாவுக்கு செக் புக் கொடுக்க அதை அண்ணாமலையிடம் காட்டி சந்தோஷப்படுகிறார்.. இதன் போது ஆனந்த கண்ணீரும் வடிக்கின்றார் மீனா. இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!