• Jan 19 2025

கர்ப்பம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு... ராதிகாவுக்கு பாக்கியா சொன்ன வார்த்தை! கோபிக்கு ஆப்பு உறுதி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பாக்கியா வீட்டிற்கு மையூ வர அவரை இருக்க வைத்து ஸ்னேக்ஸ் கொடுக்கிறார் பாக்கியா.  இதன் போது மையூ அம்மாக்கு சாப்பாடு கொடுத்து  விட்டாங்க. எனக்கு ரொம்ப ஜொலியா இருக்கு. நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொன்னேன் என்று அந்த விஷயத்தை சொல்ல வர ராதிகா ஓடி வந்து தடுத்து விடுகிறார்.

மேலும் ஏன் அம்மா ஒரே புளிப்பா சாப்பிடுறீங்க, எனக்கும் உங்களுக்கு சமைச்ச சாப்பாடு தான் தராங்க எனக்கு பிடிக்கவே இல்லை என்று சொல்ல, பாட்டி புளிப்பு கொஞ்சம் கூட போட்டு சமைச்சு இருப்பாங்க என்று சொல்லி  சமாளிக்கிறார்.

இதை அடுத்து எழில் பங்க்ஷன் ஒன்றுக்கு போக கிளம்ப ஈஸ்வரியையும் அழைக்கிறார். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார். அந்த நேரத்தில் நிலா வந்து பாட்டி என் டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்க, உனக்கு என்ன நல்லா தான் இருக்கு என்று ஈஸ்வரி சொல்வதை பார்த்த அமிர்தா சந்தோஷம் அடைகிறார்.

மீண்டும் எழில் ஈஸ்வரியை அழைக்க, நான் தான் உன் கூட பேசறது இல்ல தானே. நீ நிலாவ படிக்க வைத்து நன்றாக பார்த்துக் கொள்ளு. ஆனால் நிலா வளர்ந்த பிறகு அவளுக்கு உண்மை தெரிஞ்சா நாளைக்கு அவ கூட உன்ன அப்பான்னு கூப்பிட மாட்டா  என்று காயப்படுத்தி பேசுகிறார்.


மறுபக்கம் மையூ கிட்ட ஏன் சாப்பிட கொடுத்து விட்டீங்க? அவ எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்ல பார்த்தா என ராதிகா தனது அம்மாவுக்கு போன் பண்ணி பேச,  இன்னும் விஷயத்தை சொல்லலையா? என்று அவரின் அம்மா கேட்கிறார். 

அதன் பிறகு கோபியை அழைத்து நானும் வாரேன் உங்க வீட்டுல விஷயத்தை சொல்லுவோம் என்று சொல்ல, வேண்டாம் அத்தை நானே சொல்லிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்கிறார் கோபி.

இதை தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்து ராதிகா பேசிக் கொண்டிருக்க, அங்கு துணி காயப்போட வந்த பாக்கியா பட்டும்  படாமல் கேட்டு விடுகிறார். இதைத் தொடர்ந்து தலைசுற்றி ராதிகா கீழே விழப்போக பாக்கியா பிடித்துக் கொள்கிறார்.

மேலும் உங்களுக்கு என்ன நடந்தது? இப்படி எல்லாம் ஏன் நடந்துக்கிறீங்க என்று பாக்கியா ராதிகாவிடம் கேட்க, ராதிகா ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார்.

ஆனாலும் நீங்கள் நடந்து கொள்வதெல்லாம் பார்த்தா கர்ப்பமாக இருக்கிற மாதிரியே இருக்கு. உண்மைய சொல்லுங்க என்று கேட்க, டேட் தள்ளி போச்சு. டாக்டர் கிட்ட செக் பண்ணினேன் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க என்று ராதிகா சொல்லியதோடு, நாங்க ரெண்டு பேருமே இத எதிர்பார்க்கல என்று சொல்ல, நல்ல விஷயம் தானே என்று பாக்கியா சொல்லி தடுமாறுகிறார். இது தான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement