பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், கோபியை சாப்பிட வருமாறு ஈஸ்வரி அழைக்கின்றார். ஆனால் அவர் தனக்கு சாப்பாடு வேண்டாம் லேட் ஆக சாப்பிடுகின்றேன் என்று சொல்லுகின்றார். பிறகு சாப்பிட அமர்ந்த ஈஸ்வரி சாப்பிட பிடிக்காமல் எழுந்து செல்ல, பாக்யா அவரை சாப்பிடுமாறு சொல்லுகின்றார். ஆனாலும் தான் கோபியுடன் சாப்பிடுகின்றேன் என்று சொல்லுகின்றார். இதனால் பாக்கியா இனியாவிடம் கோபியை வந்து சாப்பிடுமாறு சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் ராதிகாவிடம் மையூ, இனிமேல் அப்பா எங்களை வந்து பார்க்க மாட்டாரா என்று கேட்க, அதற்கு ராதிகா, நான் இருக்கின்றேன் உன் கூட.. கடவுள் இப்படி எல்லாம் கஷ்டம் தாரது நம்மளை திடப்படுத்தத்தான் என்று மையூவுக்கு அட்வைஸ் பண்ணுகின்றார்.
இதை தொடர்ந்து கோபி, ராதிகா விட்டு சென்றதை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு போன் பண்ணவும் ராதிகா ஃபோனை எடுக்கவில்லை. அங்கு வந்து செழியன் கோபிக்கு ஆறுதலாக பேசுகின்றார். மேலும் உன்னை விட்டு ஜெனி பிரிந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டயோ அவ்வளவு கஷ்டமா இருக்கு என்று சொல்லி புலம்புகின்றார்.
இதை அடுத்து கீழே வந்த செழியன், பாக்யாவிடம் நான் உனக்காக எப்போதும் சப்போர்ட்டுக்கு நின்றதில்லை என்று சொல்லி அழுகின்றார். அதற்கு பாக்கியா உங்க பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்த எங்களுக்கு எங்களுடைய பிரச்சனைகளை சமாளிக்க தெரியாதா? எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொல்லுகின்றார்.
இறுதியில் கோபி மறுநாள் ராதிகா வீட்டுக்கு செல்கின்றார். அங்கு கமலாவிடம் ராதிகாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவர் அவர்கள் இங்கே இல்லை கிளம்பி சென்று விட்டார்கள் என்று சொல்லுகின்றார்.. ஆனாலும் அதை நம்பாமல் ஒவ்வொரு ரூமாக சென்று தேடுகின்றார் கோபி. எனினும் ராதிகா அங்கு இல்லை. அவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை என கமலாவும் சொல்லுகின்றார்.. இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!