பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பமாகி தற்போது மிகவும் விறு விறுப்பாக நடந்து வருகின்றது.இந்தவாரம் குடும்பத்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.அந்தவகையில் இன்றைய நாளுக்கான 3 ப்ரோமோ வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.அதில் ரானவ்,பவித்திரா,சவுண்டு ஆகியோரின் குடும்பத்தவர்கள் வருகை தந்துள்ளதுடன் தற்போது மலையாள குயின் அன்ஷிதாவின் அம்மா மற்றும் அண்ணா வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அம்மாவை ஓடிச்சென்று கட்டியணைத்து அழுதுள்ளதுடன் நீ நல்ல ஸ்ட்ரோங்கா இரு என அவரது அம்மா குறிப்பிட்டுள்ளார்.மற்றும் அவரது அண்ணா "கோபம் வந்தா கோபப்படுவாங்க அதுக்கப்புறம் உங்களுக்கே வந்து ஊட்டி விடுவாங்க பேசுவாங்க கேரக்ட்டரே அப்புடித்தான் கேம் ஏதும் கிடையாது "என கூறியுள்ளார்.
மற்றும் பிக்போஸின் வேண்டுகோளின் படி அன்ஷிதாவின் அம்மா தனது கையால் சமைத்து போட்டியாளர்கள் அனைவரிற்கும் ஊட்டிவிட்டுள்ளார்.மற்றும் அன்ஷிதா அவரது அம்மாவை பார்த்து உங்களுக்காக தான் நான் வாழுறன் உங்களுக்காக தான் இந்த உயிர்;ஐ லவ் யூ மம்மி "என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
Listen News!