அஜித் விடாமுயற்சி,குட் பேட் அக்லி எனும் திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.இரு படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன இருப்பினும் படங்கள் எப்போது வெளியாகும் என்ற தவிப்பில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.கார் பந்தயங்களில் கவனத்தினை செலுத்தி வரும் தல படப்பிடிப்புகளில் தனது கவனத்தினை செலுத்தி வருகின்றார்.
அந்தவகையில் தற்போது மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித்துடன் திரிஷா,அர்ஜுன் ,ஆரவ்,ரெஜினா ஆகியோர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலிற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.27 ஆம் திகதி அனிருத்தின் இசையில் இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுடன் இப்பட வெளியேற்றத்தில் தற்போது ஒரு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அது என்னவெனில் இப்படத்தின் கதை இன்னொரு திரைப்பட கதையினை தழுவப்பட்டிருப்பதனால் குறித்த கதைக்கு சொந்தக்காரர்கள் 100 கோடி கேட்டு தற்போது 30 கோடியாக குறைக்கப்பட்டிருப்பதனால் குறித்த தொகையினை படக்குழு இன்னும் கொடுத்து முடிக்கவில்லையாம் இதனால் இப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!