தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இறுதியாக மதராஸி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணைந்தது.
அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களை எமோஷனல் ரீதியாக கவர்ந்த படமாக காணப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படமான பராசக்தி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான வீடியோ கிளிம்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்திற்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்திற்காக தனது சம்பளத்தை 65 கோடியில் இருந்து 40 கோடியாக குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!