• Dec 26 2024

ஹன்சிகா வீட்டில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.! தீயாய் பரவும் போட்டோஸ்

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

உலக அளவில் இன்றைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தென் இந்திய நட்சத்திரங்கள் மட்டும் பலரும் கிறிஸ்மஸ் பண்டிகையை தமது வீடுகளில் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக காணப்படும் ஹன்சிகாவும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன..

d_i_a

சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் ஹன்சிகா. இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும்  காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.


ஹன்சிகா பார்ப்பதற்கு கொழுகொழு என இருந்தாலும் அவருக்கு என தனி மார்க்கெட் காணப்பட்டது. எனினும் ஒரு கட்டத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து சிலிம்மாக மாறினார். இதனால் பட வாய்ப்புகள் ஹன்சிகாவுக்கு குறைய தொடங்கின.

இதை தொடர்ந்து சமீபத்தில் தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement