தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் கமருதீன் பார்வதிக்கு இடையே இடம்பெற்ற உரையாடல் வைரல் ஆகி வருகிறது. அதாவது கமருதீன் - அரோரா - பார்வதி ஆகிய மூவருக்கும் இடையில் ஒரு காதல் வலை காணப்படுகிறது.
கமருதீன், அரோரா கூட பேசுவதை பார்வதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல அமித்துடன் பார்வதி பேசுவதை கமருதீனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

இதை தொடர்ந்து நேற்று இரவு பார்வதி கமருதீனிடம் நீதான் அரோரா கிட்ட சொல்லனும் பேபி என்று பேசுகின்றார். ஆனால் அரோராவோ கமருதீன் கூட இனி ஹாய், பாய் ரிலேஷன்ஷிப் தான் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், பார்வதியும் கமருதீனும் பேசிக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் கமருதீனிடம், ஏதோ என்னிடம் பேச வேண்டும் என்றீர்களே.. பேசலாமா? என்று கேட்க, வேறு வழி இல்லாமல் கமருதீன் சென்றார்.
இதன் போது பிக் பாஸ், கமருதீனை தனியாக விளையாடுமாறு அட்வைஸ் பண்ணியுள்ளார். அவருடைய நண்பர் கூறிய கருத்துக்களையும் நினைவூட்டினார். இதனால் அதற்கு பிறகு பார்வதியும் வேண்டாம் அரோராவும் வேண்டாம் என கமருதீன் முடிவு எடுத்துள்ளாராம்.
Listen News!