இந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் தர்மேந்திரா. இவர் தனது 90 வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பாக காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தர்மேந்திராவுடன் இணைந்து நடித்த சினிமா பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றார்கள். சினிமாவை விட நிஜ வாழ்க்கையில் தர்மேந்திரா பெரியவர் என்று பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்திருந்தார்.
1960 ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தை தொடங்கிய தர்மேந்திரா இதுவரையில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள படம் என்றால் அது இக்கீஸ். அந்தப் படம் எதிர்வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

தர்மேந்திராவுக்கு இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. முதலாவது திருமணத்தின் போது அவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். அதன்பின்பு இரண்டாவதாக ஹேமா என்பவரை திருமணம் செய்தார். அதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கண்ணீருடன் இறுதி பிரியாவிடை கொடுத்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான்கான், அமிர்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
Listen News!