நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா விவகாரம் எல்லோரும் அறிந்தது என்றாலும், இவர்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு எப்போது ஒரு தீர்வு வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுதுவதற்கு காரணமானது. இது தொடர்பில் காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பில் பல பதிவுகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ச்சியாகவே பதிவிட்டு வருகிறார் ஜாய் கிரிஸில்டா. சமீபத்தில் ரங்கராஜின் பணம் பத்தும் செய்யும் என்று பதிவிட்டிருந்தார்.

அதே நேரத்தில், ஜாயின் குழந்தைக்கு நான் தான் அப்பா என உறுதியானால் மட்டுமே தான் அந்த குழந்தைக்கான பொறுப்பை ஏற்பேன் என்று ரங்கராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக அவர் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு செல்லவில்லை, அவரை கண்டா வரச் சொல்லுங்க என்று அட்டாக் செய்து இருந்தார் ஜாய் கிரிஸில்டா.
இந்த நிலையில், மாதம்பாடி ரங்கராஜ் விவகாரத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அதாவது தங்கள் நிறுவனத்தைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்ட ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!