சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி பற்றிய ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் மீனா, வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் வீட்டு வேலைகளை எல்லாம் ரோகிணி செய்கின்றார்.
இதை பார்த்து சந்தேகப்பட்ட முத்து, மீனா திரும்பி வர மாட்டாங்க என்று நினைச்சுட்டியா? அதனாலதான் வீட்டு வேலை எல்லாம் செய்றீங்க போல, இது திட்டமிட்ட சதி என்று வீட்டார் முன்னிலையில் ரோகிணி மீது சந்தேகம் கொள்கிறார்.
மறுபக்கம் அம்மா வீட்டில் இருக்கும் மீனாவிடம் சத்யா என்ன நடந்தது என்று கேட்க, அவர் ஒன்றும் சொல்லவில்லை . அதன் பின்பு அவருடைய அம்மா எதையும் மறைச்சுட்டு இருக்கியா? என்று கேட்க, அவரை கட்டி அணைத்து அழுகின்றார் மீனா. ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை.

இதை தொடர்ந்து சத்யா ஆபீஸில் மீனாவை நினைத்து யோசித்துக் கொண்டிருக்க, அவர் டல்லா இருப்பதை பார்த்த அவரது பாஸ் ரேகா அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டு, அந்த பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என சத்யாவுக்கு ஐடியா கொடுக்கின்றார்.
அதன் பின்பு சத்யா ஆஃபீஸ்க்கு வந்த முத்து அவரிடம் நடந்தவற்றை சொல்லி, இதற்காக மீனா சண்டை போட்ட மாதிரி தெரியல. ஆனா வேறு ஏதோ விஷயம் இருக்கு. அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்.
இறுதியாக பார்வதி வீட்டுக்கு சென்ற மீனா, அங்கு பார்வதி கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கின்றார். இதன்போது பொய் சொல்லக்கூடாது என அவர் சொல்லும் கதையை கேட்டு யோசிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!