பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் பழனியோட கடையில வந்து நிக்கிறதைப் பார்த்த குமார் துறைக்கு இங்க என்ன வேலை என்று கேட்கிறார். அதுக்கு பழனி என்ர மருமகன் கடைக்கு வாறதில என்ன பிரச்சனை என்கிறார். அதனை அடுத்து குமார் கதிரோட பிரச்சனை பண்ணுறார். அதை சுகன்யா போனில வீடியோ எடுக்கிறார். பின் கதிர் பழனியைப் பார்த்து உங்களுக்காக அமைதியாப் போறேன் என்கிறார்.

அதனை அடுத்து பழனி கதிர் கிட்ட மன்னிப்புக் கேட்கிறார். பின் சுகன்யா நடந்ததெல்லாத்தையும் ராஜிக்கு சொல்லிட்டு எடுத்த வீடியோவையும் அனுப்பிவிடுறார். அதைப் பார்த்த ராஜி குமார் கிட்ட போய் எதுக்காக கதிர் மேல கை வைச்சனீ என்று கேட்கிறார். பின் ராஜி குமார் செய்ததை வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லுறார்.
அதனைத் தொடர்ந்து ராஜி குமாரைப் பார்த்து நீ திருந்திட்டேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா என்று கேட்கிறார். அதைப் பார்த்த பாட்டி இந்த ரெண்டு குடும்பமும் எப்பவும் ஒன்னா சேராது என்று சொல்லி அழுகிறார். பின் கோமதி கதிரைப் பார்த்து இனிமேல் பழனியை பார்க்க கடைக்குப் போகாத என்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.

அதனை அடுத்து ராஜி கதிர் கிட்ட தன்னை மீனா அக்கா வீட்ட கூட்டிக்கொண்டு போகச் சொல்லுறார். பின் மீனா வீட்ட போன ராஜி என்னை மன்னிச்சிடுங்க என்கிறார். மேலும் ராஜி மனசில ஏதும் வைச்சிருக்காதீங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!