• Jan 19 2025

ஜூலை 12-ம் தேதி சும்மா தெறிக்க விடுறோம்.. தனது உற்சாகத்தை பகிர்ந்த அனிருத்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் சங்கர், கமலஹாசன் உட்பட இந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரகுல் பரீத், காஜல் அகர்வால் தெலுங்கு நடிகரான பிரம்மானந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலிப் குமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த நிலையில், இதன் இரண்டாம் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


இதன்போது குறித்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், நான் ஒரு 90's கிட்.  அதனால் எனக்கு பிடித்த இயக்குனர் சங்கர் தான். என்னுடைய முதல் படம் 3. இப்போ என்னுடைய 33வது படம் இந்தியன் 2 நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கு.

இந்தியன் 2 ரிலீஸ் ஆகும்போது நான் கைக்குழந்தையாக இருந்தன். சங்கர் சார் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவருடன் இணைந்து பணியாற்றுவதுதான் எனது வாழ்நாள் கனவு. இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க வேண்டும் என சங்கர் சார் என்னிடம் 2018 ஆண்டு கேட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். இதனை மிகப்பெரிய பொறுப்பாக கருதி இதற்கு இசையமைத்துள்ளேன். பின்னணி இசைப்பணிகள் முடிந்து விட்டன. எனவே ஜூலை 12-ம் தேதி தெறிக்க விடுறோம் என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement