• Jan 18 2025

கையில் வெட்டுப்பட்டார், காதலில் கட்டுப்பட்டார்... அமர்க்களம் நடிகை சாலினி குறித்து வெளியான சுவாரஷ்யமான தகவல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிறைய காதல் படங்கள் உள்ளன. அந்த வரிசையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நடித்த அமர்க்களம் திரைப்படம் அநேகமானோரின் மனங்களை கவர்ந்தது. அந்த படத்தில் நடித்த ஷாலினி தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. 


இயக்குனர் சரண் அமர்க்களம் படத்தினை இயக்கினார். கதையை தாண்டி பரத்வாஜ் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான். இப்பட பாடல்களை அடித்துக்கொள்ள எந்த பாடலும் இல்லை என்றே கூறலாம்.அதிலும் இப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் அஜித்-ஷாலினி நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.


இந்த நிலையில் இயக்குனர் சரண் அமர்க்களம் படப்பிடிப்பில் நடிகை ஷாலினியின் முதல் நாள் ஷுட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில், அமர்க்களம்- ஷாலினி அவர்களுடன் அவரது முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட் பற்றி விவரித்த போது இதிலிருந்து மூன்றாவது நாள் ஏ.கே அவர்களுடன் படப்பிடிப்பில் இணைந்தார், கையில் வெட்டுப்பட்டார், காதலில் கட்டுப்பட்டார் என பதிவு செய்துள்ளார். 

இதோ டுவிட்டரில் அவர் போட்ட பதிவு...



Advertisement

Advertisement