• Jan 19 2025

அசுர வேகத்தில் சாதனை படைத்த அமரன்.. பத்தே நாட்களில் 200 கோடிகளை அள்ளி மெகா ஹிட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!


தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படங்களில்  சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசான அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி கூட்டணியில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜ் நாட்டுக்காக போரிட்டு வீர மரணம் அடைந்தார். இவருடைய வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் காதல், வலி, எமோஷனல், பெற்றோர்களின் தவிப்பு என அத்தனையும் எதார்த்தமாக காட்டப்பட்டது.

d_i_a

இந்த படத்தில் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். அதைப்போல சாய் பல்லவியும் ஒரு காதலியாக மனைவியாக தாயாக ஒவ்வொரு கேரக்டரிலும் நடித்து பார்ப்பரின் மனதை கட்டி போட்டுள்ளார். உண்மையாகவே இந்த படத்தை சாய் பல்லவிக்காக பார்க்கலாம் என பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.


இந்த நிலையில், அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளே 42. 3 கோடிகளை வசூலித்த நிலையில் தற்போது பத்து நாட்களில் முடிவில் 200 கோடிகளை உலக அளவில் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமரன் திரைப்படம் தான் சிவகார்த்திகேயனின்  நடிப்பில் வெளியான படங்களில் இருநூறு கோடிகளை வசூலித்த முதல் படமாக காணப்படுகின்றது. இந்த படத்தின் வெற்றியை பலரும்  கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement