• Jan 19 2025

சின்ன வயசுல இருந்தே தனுஷை விரும்பிய அக்ஷயா..! முதன் முறையாக மனம் திறந்த நெப்போலியன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்பட்டவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் கிராமத்து கதையம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். தற்போது இவருடைய மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் நடைபெற உள்ளது.

புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் மூலம் சினிமாவில் என்ட்ரி  கொடுத்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர கேரக்டரில் கூட சிறப்பாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான கிழக்கு சீமையிலேயே, எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி, எஜமான் போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களுக்கு நெருக்கமான படங்களாகவே காணப்படுகின்றது.

d_i_a

இதை தொடர்ந்து நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதன் போது நெப்போலியன் மிகவும் எமோஷனலான காட்சிகள் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில், நெப்போலியன் தனியார் சேனல் ஒன்றுக்கு மகனின் திருமணம் தொடர்பில் பேட்டி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், எமது சொந்தக்காரர் தனுசுக்கு பொண்ணு பார்த்தாக சொன்னார்கள். அதன்பின் எனது அண்ணனும் பொண்ணை பார்த்தார்.


அவங்க எங்களை 13 வருசத்துக்கு மேலாக பாத்துட்டு இருக்காங்க. நாங்க போடுற வீடியோ எல்லாம் பாத்து இருக்காங்க.. அக்சயாவுக்கு தனுஷை சின்ன வயசுல இருந்தே தெரிஞ்சு இருக்கு.. அவங்க முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணத்தை செய்து இருக்காங்க..

நானும் கேட்டேன்.. உங்களை யாரும் கம்பெல் பண்ணினாங்களா? போஸ் பண்ணினாங்களா? என்று எல்லாம் கேட்டேன். ஆனா அவங்க முழு சம்மத்துடன் தான் இந்த திருமணத்தை செய்து இருக்காங்க.. என்று தெரிவித்து உள்ளார். 

Advertisement

Advertisement