• Jan 19 2025

அல்லு அர்ஜுனுக்கு இது புடிக்கவில்லையாம்! புஷ்பா 2- இறுதி கட்டத்தில் நடந்த பிரச்சினை!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன்-ரஷ்மிகா மந்தனா-பஹத் பசில் நடித்து வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இது வசூலில் சாதனை படைத்து ரசிகர்களினால் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை இந்நிலையில் இதன் பாகம் 2ன்  வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 


இந்த திரைப்படத்தில் முதல் பாகத்திற்கு இசையமைத்து அதற்காக தேசிய விருதையும் வென்றார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் முதல் பாகத்தின் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. அதற்கான பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத் இரண்டாம் பாகத்திற்கும் அவர்தான் இசையமைத்து வந்தார். 

d_i_a


படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டார் அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இன்னும் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். இப்படத்திற்கான பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை. தமன் மற்றும் 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத் அமைக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்த பின்னணி இசை, படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்குப் பிடிக்கவில்லையாம் அதனால், இரண்டாவது வெர்ஷனாக தமன் அமைத்துத் தர உள்ள பின்னணி இசையை வைத்து யாருடைய பின்னணி இசையை படத்தில் வைக்கலாம் என முடிவு செய்யப் போகிறார்களாம். 


Advertisement

Advertisement