• Jan 18 2025

Movie அப்டேட் தரல இதுமட்டும் சரியா செய்றாரு...! அஜித்தின் அடுத்த ப்ளான்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாக்கி வரும் திரைப்படம்  'குட் பேட் அக்லி' இப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நடிகர் அஜித். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அத்தோடு துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனியின் 'விடாமுயற்சி' படத்திலும் நடித்து வருகிறார்.


இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அஜித் திரைப்படங்கள் தவிர்த்து, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கூட அவர் கார் பந்தயத்தில் விரைவில் கலந்துகொள்ள இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


இந்நிலையில் நவம்பர் 27ஆம் தேதி முதல் அஜித்தின் ரேஸிங் அணி தீவிர பயிற்சியைத் தொடங்க இருக்கிறது என்று அஜித்தின் 'venus motorcycle tours' நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக 'venus motorcycle tours' வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "பல்கேரியாவில் நடக்கும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பில் தனது காட்சிகளை நவம்பர் 24ஆம் தேதியுடன் நிறைவு செய்யஇருக்கிறாராம் அஜித்.

Advertisement

Advertisement