• Dec 07 2024

கங்குவா பாக்கல... ஆனா அதுக்கு விதை போட்டது கூல் சுரேஷாம்.. அனல் பறக்கும் பேச்சு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் ஒரு சிலர் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பிரம்மிக்க வைக்க வைத்துள்ளது என்று பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், கங்குவா படம் தொடர்பிலும் அந்தப் படத்திற்கு எழுந்துள்ள நெகட்டிவ் விமர்சனங்கள் தொடர்பிலும் படக்குழு தொடர்பிலும் நடிகர் கூல் சுரேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தற்பொழுது அவர் அளித்தபடி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், கங்குவா  படத்தின் இயக்குனரை சிறுத்தை படத்தில் இருந்தே தெரியும். அப்படியே இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேலையும் தெரியும். அவர் என்னைச் செல்லம் தங்கம் என்று கூப்பிடுவார். ஆனால் அவர்களுக்கு என்னை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கான எண்ணம் வரவில்லை. 

d_i_a

ஒருவேளை கேரக்டர் இல்லாமல் கூட இருக்கலாம். நான் சாப்பிடுவது சினிமா சாப்பாடு என்பதால் கங்குவா  படத்திற்கு பலரும் பல வித விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அதனால் தான் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தேன்.


நான் குரல் கொடுத்த பிறகு தான் ஜோதிகாவே குரல் கொடுத்தாங்க. அதுக்கு முதலில் விதை  போட்டது நான். கங்குவா  படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும்போது படத்தில் நடித்த யாருமே ஆதரவாக பேசவில்லை. ஆனால் கூல் சுரேஷ் ஆதரவாக குரல் கொடுப்பேன்.

 இப்போது உண்மையை சொல்லுகின்றேன். நான் படம் பார்க்க போகாமல் இருக்க காரணம் அதை பார்த்தால் எதாவது ஒரு கேரக்டரில் நாம் நடித்திருக்கலாமே என்ற எண்ணம் வந்துவிடும். அதனால் தான் படத்தை பார்க்க வில்லை. அதேபோல அதற்கு முதல் வெளியான ஜெய் பீம் படத்தையும் பார்க்கவில்லை என கூல் சுரேஷ் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement