• Jan 19 2025

அஜித்தை பாடாய் படுத்திய மகிழ் திருமேனி.. அசர வைத்த ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘விடாமுயற்சி’ சந்தேகம் தான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. தற்போது ஹைதராபாத்தில் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் அஜித் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வார் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிப்பதற்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கும் பெரிய வித்தியாசத்தை அஜித் உணர்ந்ததாகவும் மகிழ் திருமேனி லேசில் ஒரு டேக்கை ஓகே சொல்ல மாட்டார் என்றும் ஐந்து டேக், பத்து டேக் என்று அஜித்தை பாடாய் படுத்தி வேலை வாங்குவார் என்றும் ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரே டேக்கில் அனைத்து ஷாட்டுக்களையும் ஓகே செய்து அஜித்தை அசத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் அப்ரோச் அஜித்துக்கு பிடித்து விட்டதை அடுத்து அவருக்கு இன்னொரு படம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அனேகமாக ’குட் பேட் அக்லி’ படத்தை முடித்தவுடன் அவருக்கே இன்னொரு படத்தை கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கு முக்கிய காரணம் மகிழ் திருமேனி  தான் என்றும் ஒரு டேக்கை அவர் பலமுறை எடுப்பதால் காலதாமதம் ஆவது மட்டுமின்றி படக்குழுவினர் முன்னிலையில் அஜித்தை பல டேக்குகள் வாங்குவது அஜித்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திதாகவும் கூறப்படுகிறது. எனவே இனி மேல் மகிழ் திருமேனி பக்கம் அஜித் தலை வைத்து கூட படுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

போகிற போக்கை பார்த்தால் ’விடாமுயற்சி’ படத்திற்கு முன்பே ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement