• Jan 19 2025

‘பிஏ பிசிக்ஸா? கெமிஸ்ட்ரியா? ஆர்வக்கோளாறால் பல்பு வாங்கிய தங்கமயில்..! ஓவர் பந்தாவால் மீனா-ராஜி கடுப்பு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று மீனா அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு தனது கணவர் செந்திலுக்காக காத்திருக்கும் நிலையில் அவர் வந்தவுடன் இருவரும் ஒரு ரெஸ்டாரண்ட் செல்கின்றனர். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ’எனது அலுவலகத்தில் என்னை சென்னைக்கு டிரெய்னிங்கிற்காக அனுப்புகிறார்கள், அப்போதும் நீயும் வா, ரெண்டு பேரும் ஜாலியாக பீச் எல்லாம் போய் சுத்தலாம்’ என்றும் கூறுகிறார் . உடனே செந்திலும் ’ஆமாம் நானும் வருகிறேன், நாம் ஹனிமூன் கொண்டாடியது போல் இருக்கும்’ என்றும் கூறுகிறார்

இந்த நிலையில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாண்டியன் போன் செய்து எங்கே இருக்கிறாய் என்று கேட்க, வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது அதனால் ரிப்பேர் பாத்துட்டு வருகிறேன் என்று செந்தில் கூறுகிறார். ஆனால் பாண்டியன், செந்தில் - மீனா சாப்பிடும் ஹோட்டலுக்கு தற்செயலாக வர, அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் தங்கமயில் கோமதியிடம் இன்று என்ன சமையல் செய்யலாம், இடியாப்பம் செய்யலாம் என்று கூற, அதெல்லாம் வேண்டாம், எல்லோருக்கும் இடியாப்பம் செய்ய நேரமாகும், சோறு வடித்து விடலாம் என்று கோமதி கூறுகிறார். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, நான் இடியாப்பம் செய்கிறேன் என்று தங்கமயில் கூறுகிறார்.



அப்போது அரசியிடம்  தங்கமயில் ’நீ என்ன படிக்கிறாய்’ என்று கேட்க அதற்கு அரசி ’நான் பிஏ படிக்கிறேன்’ என்று கூறுகிறார், அதற்கு தங்கமயில் ‘‘பிஏ பிசிக்ஸா? கெமிஸ்ட்ரியா? என்று கேட்டு பல்பு வாங்கும் காட்சிகளும் உள்ளன

இந்த நிலையில் மீனா வருகிறார், அப்போது நானும் செந்திலும் ஹோட்டலுக்கு சென்றோம், உங்களுக்காக போண்டா வாங்கிக் கொண்டு வந்தேன் என்று கோமதியிடம் கொடுக்கிறார். அதை கோமதி ஆசையுடன் வாங்கி சாப்பிடும் போது தங்கமயில் அதை தடுக்கிறார். கடையில் வாங்கியதை சாப்பிட வேண்டாம், எந்த எண்ணெயில் செய்திருப்பார்களோ என்று எல்லோரிடமிருந்து பிடுங்கி வைத்துவிட்டு உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள், நான் உங்களுக்கு செய்து கொடுக்கிறேன்’ என்று கூற மீனா செம கடுப்பாகிறார்.

அவர் உள்ளே போனதும் கோமதியிடம் ’இவங்க ரொம்ப ஓவரா ஆட்டம் போடுறாங்க, இதெல்லாம் நல்லதுக்கு இல்லை’ என்று சொல்ல கோமதி மீனாவை சமாதானப்படுத்துகிறார். அப்போது சரவணன் அங்கு வரும்போது போண்டா சாப்பிடுகிறீர்களா? என்று மீனா கேட்கும் போது ’சாப்பிடுகிறேன்’ என்று கூறுகிறார். உடனே சரவணன் கையில் இருந்த போண்டாவையும் பிடுங்கும் தங்கமயில் நீங்கள் போண்டாவெல்லாம் சாப்பிடக்கூடாது, எதுவாக இருந்தாலும் நான் செய்து தருகிறேன்’ என்று ஓவர் ஆட்டம் போடுகிறார். இதனால் கடுப்பாகும் மீனா, ராஜி ஆகிய இருவரும் ரொம்ப ஓவரா தான் ஆடுகிறார்கள், இது எங்கே போய் முடியுமோ என்று கூறுவதை உடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

அம்மாவின் தவறான அறிவுரை காரணமாக தங்கமயில் ஓவர் ஆட்டம் போட தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பாண்டியன் மற்றும் கோமதி ஆகிய இருவரும் எப்போது கடுப்பாவார்களோ அப்போது முதல் தங்க மயிலுக்கு ஆப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement