• Jan 08 2026

கங்குவா படம் உருவாக காரணமே அஜித் தான்! உண்மையை போட்டு உடைத்த சிறுத்தை சிவா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகவும் ஆனால் 2000 கோடி வரை வசூலில் சாதனை படைக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய பிரமாண்ட செலவில் உருவாகும் கங்குவா  திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாறுபட்ட வேடத்தில் நடிக்கின்றார். இதன் காரணத்தினால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகின்றது.

சூர்யாவுக்கு ஜோடியாக திசா பதாணி நடிக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் பல எதிர்பாராத சர்ப்ரைஸ்கள், திருப்பு முனைகள் காணப்படுகின்றன. அக்டோபர் பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தோடு இந்த படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனாலும் தலைவர் சூப்பர் ஸ்டாருடன் மோத விருப்பம் இல்லாமல் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.


அதன்படி தற்போது நவம்பர் 14ஆம் தேதி கங்குவா ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் தொடர்பில் மிகவும் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள்

இந்த நிலையில், கங்குவா உருவாகக் காரணமே அஜித் தான் என இந்தப் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். அதாவது அஜித் சாருக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் அழகானது. அஜித் சார் எப்பவுமே சொல்லுவாரு...சிவா உன்கிட்ட திறமை  இருக்குது அத நீங்க வெளிப்படுத்தணும்.. கண்டிப்பா உங்களால முடியும்.. என்று சொன்னாரு. மேலும் நீங்க பெரிய இடத்துக்கு போகணும் என்று மனதார வாழ்த்துவார். அவர் கொடுத்த அந்த உத்வேகம் தான் கங்குவா  படத்தை பண்ண ஆரம்பிச்சேன் என்று சிறுத்தை சிவா தற்போது மனம் திறந்து உள்ளார்.


Advertisement

Advertisement