• Sep 14 2024

போட்டோவை பார்த்த கோபிக்கு வந்த ஆவேசம்.. வெளுத்து வாங்கிய ஈஸ்வரி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா ராமமூர்த்திக்கு செயின் ஒன்றை கொடுத்து அதனை ஈஸ்வரிக்கு போட்டு விடுமாறு சொல்லுகின்றார். அதன் பின்பு ஒவ்வொருவரும் ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றார்கள் இதையெல்லாம் கோபி கீழே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து பழனிச்சாமி போய் ஆசீர்வாதம் வாங்க, கோபி  கோவப்படுகின்றார். மேலும் பாக்கியா  சிரித்து சிரித்து பேசுவதை பார்த்து வயித்தெரிச்சல் படுகின்றார். அவர் எடுத்த போட்டோவை பார்த்து கோவப்படுகிறார். அத்துடன் தான் கொண்டு வந்த கிஃப்டை கொண்டு போய் தன்னையும் ஆசீர்வாதம் பண்ணுமாறு சொல்ல, ராமமூர்த்தி எழுந்து விடுகின்றார்.


மேலும் நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்கள் நான் சென்று விடுகின்றேன் என கோபிக்கு கெஞ்சிய போதும் ராமமூர்த்தி ஆசீர்வாதம் பண்ணவில்லை அவர் கொண்டு வந்த கிப்டையும் தூக்கி எறிந்து விடுகின்றார். 

அதன் பின்பு ஈஸ்வரி தனியாக நிற்க, அவரிடம் சென்று பேசவும் ஈஸ்வரியும் அவரை திட்டுகின்றார். மேலும் அழகாய் குருவிக்கூடு போல இருந்த இந்த வீட்டை நீ தான் நாசம் ஆக்கினாய், இப்போ எல்லாம் பாக்கியா தான் கவனித்துக் கொண்டிருக்கின்றார். நீ யாரை ஒழுங்கா பார்த்தா? பிள்ளைகளை பார்த்தியா? என்னத்த கவனிச்சா என கேள்வி மேல் கேள்வி கேட்க, கோபி எதுவும் செய்ய முடியாமல் தலை குனிந்து நிற்கின்றார். இறுதியில் இங்கிருந்து போகுமாறு ஈஸ்வரியும் கையெடுத்து கும்பிடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement