• Nov 25 2025

சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய மாற்றம்! சிலம்பரசனுடன் கைகோர்க்கும் VJS.! லீக்கான தகவல்கள்

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படங்களில் ஒன்று சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ‘அரசன்’. தேசிய விருதுகள் பலவற்றை குவித்த பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படம், அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


“வடசென்னை” மற்றும் “அசுரன்” போன்ற ஹிட்டான கதை சொல்லல், இயல்பான நடிப்பு, நிஜத்தன்மையுடன் கூடிய காட்சியமைப்பு என்பன வெற்றிமாறன் படங்களின் அடையாளங்கள் என்பதால், ‘அரசன்’ குறித்த ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது.

திரைப்படத்துக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவலின்படி, ‘அரசன்’ வடசென்னையின் சமூக, அரசியல், பின்னணியை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. வடசென்னைப் பகுதியில் குடியிருப்பவர்களின் வாழ்க்கை, அங்கே நடக்கும் அதிகாரப் போராட்டம்,இவையனைத்தையும் படத்தில்  வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.


சிம்பு படத்தில் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாவில்லையெனினும், இது அவரது கரியரில் மிகவும் தீவிரமான மற்றும் சவாலான வேடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி ஒரு கதையில் கலந்தாலே அந்த கதையின் ஆழமும் தாக்கமும் அதிகரிக்கும் என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகம் இல்லை. இந்நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

Advertisement

Advertisement