தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
சமீபத்தில் பராசக்தி படத்திலிருந்து போஸ்டர் ஒன்று வெளியானது. அதில் நடிகை ஸ்ரீலீலாவின் அழகு ரசிகர்களை கட்டி போடும் அளவுக்கு ஈர்த்தது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணி புரியவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது பக்தர்கள், மக்கள் என பலரும் ஸ்ரீலீலா உடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!