பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் அதிக சமூக வலைதள போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் திவாகரும் ஒருவராக காணப்படுகின்றார். ஆரம்பத்தில் இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் கடந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார்.
திவாகர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக காரணமே சூர்யா நடித்த கஜினி படத்தில் இடம்பெற்ற தர்பூசணி ரீல்ஸ் தான். இந்த ரீல்ஸ் சீனை திவாகர் செய்தார். இது கடும் ட்ரோல் செய்யப்பட்டு திவாகரும் பிரபலமானார். மேலும் பல சர்ச்சை கருத்துக்களை கூறி பலரின் வெறுப்பையும் சம்பாதித்தார் திவாகர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இவருடைய செயற்பாடுகள் முகம் சுழிக்க வைத்தன. இதனால் அவர் எலிமினேட் ஆனார். இவரது எலிமினேஷன் ஒருபுறம் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், இன்னும் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற திவாகர், யுத்துடன் பாட்டு பாடி டான்ஸ் ஆடி vibe பண்ணும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Listen News!