மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. ஜாய் கிரிஸில்டா ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அதற்கான டிஎன்ஏ டெஸ்ட் எடுக்குமாறு மாதம்பட்டி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் தான் டெஸ்ட் எடுக்க முன்வராமல் இழுத்தடித்து வருவதாக ஜாய் பதிவிட்டு இருந்தார்.
இதற்காக மகளிர் ஆணையத்தில் விசாரணையும் நடத்தப்பட்டது. இதன் போது தன்னை திருமணம் செய்து கொண்டதையும், அந்த குழந்தைக்கு தான்தான் அப்பா என்றதையும் ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார் .
ஆனால் மறுநாளே ஜாய் கிரிஸில்டா சொன்னது போல நான் எந்த ஒப்புதலையும் தெரிவிக்கவில்லை என்று அவருக்கு எதிராக புகார் கொடுத்தார் ரங்கராஜ். மேலும் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதியும் நான் என்னுடைய கணவருடன் உறுதியாக நிற்கின்றேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை ஜாய் கிரிஸில்டா பணத்துக்காக தான் பயன்படுத்துகின்றார் என்று பிரபலம் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அவர் கொடுத்த பேட்டியில், ஜாய்க்கு பணம் மீது தான் நோக்கம். அதற்காக தான் நாடகம் போடுகிறார்.
சின்ன வீடு பாக்கியராஜ் கதையை எடுத்துக் கொண்டால், அதில் அவருடைய முதல் மனைவிக்கு அவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை வைத்திருந்தது தெரியும். ஆனால் அவருடைய முதல் மனைவிக்கு இவர் எப்படித்தான் இருந்தாலும் சுவற்றில் அடித்த பந்து போல் என்கிட்டே தான் வர வேண்டும் என்று தெரியும் அதனால் கண்டு கொள்ளவில்லை.
அதேபோலத்தான் ஸ்ருதியும். ஆனால் அவர் மாதம்பட்டிக்கு உறுதுணையாக இருக்கின்றார். எங்களை பிரிப்பது தான் ஜாயின் நோக்கம் அவர்களுடைய ரிலேஷன்ஷிப் அன்பினால் இல்லை காசை மையமாகக் கொண்டுதான் உள்ளது என்று தெரிவித்தார் . எனினும் இது எங்க போய் முடியப்போகுது என தெரியவில்லை என்றார்.
Listen News!