• Jun 30 2024

காலா காலத்தில் கல்யாணம் பண்ணாமல் இதெல்லாம் தேவையா? ரம்யா பாண்டியனின் வொர்க்-அவுட் வீடியோ..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யா பாண்டியன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் மற்றும் லைக் குவிந்து வருகிறது.

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்பதும் அவருக்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டு சில நிமிடங்களே ஆகும் நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

 ’ஜிம்மில் யாருமே இல்லை நீங்களும் மாஸ்டரும் மட்டும் தானா, ஒரே குஜால் தான் என்ஜாய்’ என்றும்,  என் அன்பு தங்கையே, சூப்பர் பிட்னஸ் ரொம்ப முக்கியம், வாழ்த்துக்கள் தங்கையே’ ’ என்றும் ’இதெல்லாம் உங்களுக்கு தேவையா’ என்றும் ’வொர்க்-அவுட் வீடியோன்னாலே ஸ்பெஷல் தான்’ என்றும் ’வொர்க்-அவுட் செய்வதற்கு என்று காஸ்டியூம் செலக்ட் செய்தீர்களா’ என்றும் ’காலகாலத்தில் கல்யாணத்தை பண்ணி, பொழப்ப பார்த்தோமான்னு இல்லாமல் வயசான காலத்துல இதெல்லாம் தேவையா’ என்றும் ’மேக்கப் இல்லாமல் இவர்களை பார்க்க முடியாது போல’ என்றும் பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

திரையுலக பிரபலங்கள் சிலரும் இந்த பதிவுக்கு லைக் செய்துள்ளனர் என்பதும், குறிப்பாக குக் வித் கோமாளி போட்டியாளர் மற்றும் நடிகர் அஸ்வின்,  ஒரு லைக் தட்டிச் சென்றுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தான் பிரபலமானார் என்பதும் இன்னும் சில விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement