• Jun 30 2024

’கல்கி 2898 ஏடி’ படத்தின் இந்த கேரக்டர் ரஜினி நடிக்க வேண்டியதா? நடந்திருந்தால் வேற லெவலா இருந்திருக்கும்..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களையும் சில கலவையான விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் இந்த படம் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்து உள்ளது என்றுதான் முதல் கட்ட செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆன்மிகம், அறிவியல் ஆகிய இரண்டையும் கலந்து புராண கதை மற்றும் கற்பனையும் கலந்து உருவாக்கப்பட்டது இந்த படம் என்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் இந்த படம் மிரட்டி உள்ளது என்றும் குறிப்பாக கமல்ஹாசனின் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் நடித்த நாயகன் கேரக்டரில் நடிக்க முதலில் ரஜினிகாந்த் அவர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் ரஜினி இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



ஒருவேளை ரஜினி இந்த படத்தில் நடித்திருந்தால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அமிதாபச்சன் ஆகிய  மூன்று பிரபலங்கள் ஒரே படத்தில் நடித்திருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் இணைந்து ’கிராப்தர்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தனர் என்பதும், கடந்த 1985 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மூன்று பிரபலங்கள் நடிக்க வாய்ப்பு இருந்தும், அது மிஸ் ஆகிப்போனதே என்று ரசிகர்கள் தற்போது புலம்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement