• Jun 30 2024

ரஜினிக்கு எதிரான போட்டி உறுதி.. ’கங்குவா’ ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் அதே தேதியில் தான் சூர்யாவின் ’கங்குவா’ படமும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் சூர்யா ’கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என்பதை உறுதி செய்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் 10 விதமான கேரக்டர்களில் சூர்யா நடித்திருப்பதாகவும் பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த படத்தின் நாயகியாக நடித்திருப்பதால் பாலிவுட்டில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியீடு, மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் திட்டமிடப்படும் என்றும் தெரிகிறது.

மொத்தத்தில் ரஜினியின் ’வேட்டையன்’ மற்றும் சூர்யாவின் ’கங்குவா’ ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இதில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement