• Aug 29 2025

இலங்கைக்கு செல்லவுள்ள நடிகர் விஜய்?..காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

luxshi / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இலங்கைக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தமிழக வெற்றிக் கழகத்தின் இலங்கைக்கான கிளையொன்றை ஆரம்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் அதனைத் திறந்து வைப்பதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே கடந்தவாரம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாட்டில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய், 


'இலங்கை கடற்படை தாக்குதலால் 800 இந்திய மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனை தடுக்க கச்சத்தீவை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் எனவும் உரையாற்றியிருந்தார்.

கச்சதீவு குறித்த விஜயின் உரையானது இலங்கை அரசியலிலும் பேசுபொருளாக மாறியதுடன் விஜயின் உரைக்கு  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலடி கொடுத்துள்ளார்.


"கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒன்று. அது இன்றும், நாளையும் எப்போதும் இலங்கைக்கு சொந்தமான ஒன்று. எந்த ஒரு ராஜதந்திர காரணத்திற்காகவும் கச்சத்தீவை இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார். 

இவ்வாறாக விஜயின் உரையானது இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில் அவர் தற்போது இலங்கைக்கு செல்வது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே  நடிகர் விஜய்யின் இலங்கை விஜயம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement