• Jan 19 2025

பிரபல இளம் இயக்குநரைக் காதலித்து வரும் நடிகர் பிரபுவின் மகள்- திருமணம் எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். இளைய திலகம் என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர்.

 இவர் நடித்த 'சின்னத்தம்பி' திரைப்படம் இப்போது வரை அனைவரின் மனதையும் கவர்ந்த, மிகவும் பிடித்த படமாக உள்ளது. நாயகனாக நடித்துக் கொண்டு இருந்தவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.


தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவருடைய மகனான விக்ரம் பிரபுவும் சினிமாவில் நடித்து வருகின்றார்.இவரது மகளுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் மூலமாக பெரிய ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனை தான் பிரபுவின் மகள் காதலிக்கிறாராம். தற்போது இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரபு குடும்பத்தில் இருந்து விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement