• Aug 01 2025

அப்பா மரணத்திற்கு பின் பயம் ஏற்பட்டது..நடிகர் அதர்வா பேட்டி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

'பாணா காத்தாடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. நடிகர் முரளியின் மகனாக திரை உலகில் அடியெடுத்து வைத்த இவர் தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார். பரதேசி,தள்ளிப் போகாதே, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.


சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் தந்தை மறைவுக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றிய பயம் ஏற்பட்டதா? என்ற கேள்விக்கு அதர்வா அளித்த பதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது "இது நிச்சயமில்லாத வாழ்க்கை. என் அப்பா மரணம் எனக்கு பெரிய பயத்தை ஏற்படுத்தியது. இருப்பது வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement