• Jul 04 2026

“தக் லைஃப்” வசூலில் எதிர்பாராத மந்தம்! 15நாட்கள் வசூலைப் பார்த்து அதிர்ச்சியில் படக்குழு!

shali / 1 year ago

Advertisement

Listen News!

மெகா எதிர்பார்ப்புகளுடன், தமிழ் சினிமாவின் புரட்சியாளர்கள் கமல்ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் இணைந்து உருவாக்கிய “தக் லைஃப்” (Thug Life) திரைப்படம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் திரைக்கு வந்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறத் தவறியதோடு, வசூல் கணக்கிலும் பெரிதாகத் தாக்கம் செய்ய முடியவில்லை என்பது தற்போது வெளியாகிய தகவல்கள் தெரிவித்துள்ளது. 


இந்தியாவில் மட்டும் 15 நாட்களில் “தக் லைஃப்” திரைப்படம் 47.54 கோடி வசூலித்துள்ளது. இது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான படத்திற்கு கிடைத்த குறைந்தளவிலான வரவேற்பாகவே கருதப்படுகிறது.


பல விமர்சனங்களில், படம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும் சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் நடுப்பகுதியில் அது மெதுவாக நகர்ந்தது என்ற கருத்துகள் வந்தன. அத்துடன், தொழில்நுட்ப ரீதியாக படம் மிக உயர்ந்த தரத்தில் இருந்தாலும், பல தருணங்களில் அது மனதுடன் உறவாடவில்லை என்று சில விமர்சகர்கள் விமர்சித்தனர். இத்தகைய காரணங்களாலேயே படம் தோல்வியினை சந்தித்தது. 

Advertisement

Advertisement