• Jan 18 2025

வெட்கப்பட்டு காதலர் தின வாழ்த்து தெரிவித்த நயன்தாரா ... வைரலாகி வரும் வீடியோ

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன். இவர் சினிமாவிற்குள் நுழைந்தததில் இருந்து இன்று வரை பிரகாசமாக மிளிரும் ஓர் நட்சத்திரமாகவே இருக்கின்றார்.ஒரு பிரபல நடிகருக்கு எவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்குமோ , அதே போல பல கோடி   ரசிகர் பட்டாளமும் ,நல்ல வரவேற்பும் இவருக்கு இன்னும் உண்டு . 


நயன்தாராவின் 81 வது படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துபவர் தான் நயன் . அந் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் X தளத்தில்  உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நடிகை நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டு காதல்  எமோஜியை பதிவிட்டுள்ளார். கூந்தலை எடுத்து பின்னாடி போட்டு கண்ணாடி அணிந்துக் கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள நயன்தாராவின் வீடியோவுக்கு ஏகப்பட்ட  லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2009ஆம் ஆண்டில் இருந்து பார்த்தால் ‘ஐரா’, ‘மிஸ்டர் லோக்கல்’ ’கொலையுதிர் காலம்’  ’நிழல்’ ’நெற்றிக்கண்’ ’அண்ணாத்த’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ 'O2’ ‘கோல்டு’ ’கனெக்ட்’ ’இறைவன்’ ’அன்னபூரணி’ என  வரிசையாக ஏராளமான தோல்வி படங்களை நயன்தாரா கொடுத்துள்ளதால்  அவருக்கு மார்க்கெட் தற்போது குறைந்துள்ளது.


இருப்பினும் தனது 81வது திரைப்படம் வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் X தளத்தில்   பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது .



Advertisement

Advertisement