அறிமுக நடிகர்கள் நடிக்க வரும்போது சம்பளம் குறித்து எந்தவித பேரம் பேசாமல் நடிக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்தவுடன் அவர்களுடைய பாணி மாறிவிடுகிறது என திரை உலகினர் புலம்பி வருகின்றனர்
சினிமாவில் எப்படியாவது நுழைந்து ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் வரும் இளைய தலைமுறை நடிகர்கள் ஒரு படம் அல்லது இரண்டு படம் ஜெயித்து விட்டால் தாங்கள் வந்த பாதையை மறந்து கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன
அந்த வகையில் 'குட் நைட்' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான மணிகண்டன் அதன் பின்னர் 'லவ்வர்' என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார். இரண்டு வெற்றிப்படம் மட்டுமே கொடுத்த தற்போது அவர் நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வைத்து படம் எடுக்க திட்டமிட்டு தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு படம் வெற்றி அடைகிறது என்றால் அதற்கு அந்த நாயகன் மட்டும் பொறுப்பு கிடையாது. கதை, மற்ற நடிகர், இசை, இயக்குனர் உள்பட பல்வேறு அம்சங்கள் இருக்கும் நிலையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றி தன்னால் தான் என நடிகர்கள் சம்பளத்தை ஏற்றுவது பொறுப்பில்லாதது என்று தயாரித்து தரப்பு தெரிவித்து வருகின்றனர்
மணிகண்டன் மட்டுமின்றி வேறு சில நடிகர்களும் இந்த பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. ஹரிஷ் கல்யாண் 'பார்க்கிங்' படத்தின் வெற்றிக்கு பிறகு 4 கோடி சம்பளம் கேட்பதாகவும் அதே போல் ' டாடா' என்ற வெற்றி படத்திற்கு பிறகு கவின் மூன்று கோடி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!