• Oct 16 2024

நயன்தாரா போலவே விக்னேஷ் சிவனுக்கும் ஒரு எக்ஸ் காதலி.. பிரேக் அப் ஆனது எதனால்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

 நடிகை நயன்தாராவுக்கு சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய இரண்டு முன்னாள் காதலர்கள் இருந்தது போல் விக்னேஷ் சிவனுக்கும் ஒரு முன்னாள் காதலி இருந்ததாக செய்திகள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திருமணத்திற்கு முன் நடிகை நயன்தாராவுக்கு சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய இரண்டு முன்னாள் காதலர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரிடமும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காதல் பிரேக் அப் ஆனது என்றும் கூறப்பட்டது.

நயன்தாராவை போலவே விக்னேஷ் சிவனுக்கும் ஒரு காதலி இருந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ளன. விக்னேஷ் சிவன் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒரு பெண்ணை காதலித்த நிலையில் அந்த காதலியை தனது அம்மாவிடம் அவர் அறிமுகம் செய்ய அழைத்துச் சென்றதாகவும் ஆனால் புடவையில் வராமல் அந்த பெண் ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்ததால் அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அதன் பிறகு ஏற்பட்ட சின்ன சின்ன கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் செட் ஆகவில்லை என்பதால் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது

அதன் பின்னர் தான் ’நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது நயன்தாராவை காதலித்து அதன் பின்னர் அவரையே விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement