• Jan 19 2025

விஜய் டிவி மைனா நந்தினியா இது?- உடல் எடையைக் குறைத்து இவ்வளவு ஸ்லிம்மாக மாறிவிட்டாரே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை நந்தினி. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டியராஜன் இயக்கத்தில் வம்சம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தார். 

இப்படத்தில் வரும் "மலரு புள்ள" என இவரது குரல் இன்றளவும் பிரபலமாக இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் தான் நந்தினி யார் என்பதை திரையுலகிற்கு எடுத்து காட்டியது, திரையுலகில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. 


அதன்பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்காரத்துரை, ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களில் கலக்கும் நந்தினி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி வருகின்றார்.குறிப்பாக பிக்பாஸ், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.இந்த நிலையில் தற்பொழுது இவர் தாவணி பூவுக்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் இவர் உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement