நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கடந்த வருடம் தனது காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்தார். இவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு கீர்த்திக்கு பல வாய்ப்புகள் குவிந்தன.
இதைத்தொடர்ந்து விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் வாங்கினார்.
இதற்கிடையில் ஆண்டனி தட்டில் என்பவரை 15 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய திருமணம் இரு வீட்டார்களின் சம்மதத்துடன் கோவாவில் வைத்து நடைபெற்றது. அதில் விஜய், த்ரிஷா என முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.
இந்த நிலையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
Listen News!