சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து செய்த நல்ல காரியத்தால் அவர் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக இருப்பது பற்றி வீட்டில் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இதன் போது முத்து தான் ஆட்களை செட் பண்ணி இப்படி செய்திருப்பார் என்று ரோகிணியும் மனோஜையும் பேசுகின்றார்கள்.
எனினும் அண்ணாமலை இந்த விஷயத்தை ஸ்வீட் செஞ்சு கொண்டாடனும், முத்து நல்ல காரியம் பண்ணி இருக்கான் என்று அவருக்கு சப்போர்ட் பண்ணுகின்றார். மேலும் மீனாவும் ஒருவர் நல்லது செய்தால் கொண்டாடுவதற்கு ஸ்வீட் செய்யலாம். ஆனால் கஷ்டப்படும் வேளையில் பிரியாணி சாப்பிடக்கூடாது என்று விஜயாவுக்கு சுட்டிக்காட்டுகின்றார்.
இதை தொடர்ந்து அம்மா வீட்டுக்குச் சென்ற மீனா அங்கு சீதா பற்றி விசாரிக்கின்றார். ஆனாலும் அவருடைய அம்மா, சத்யா முத்து செய்த நல்ல காரியத்தை பற்றி விசாரித்து புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த சீதா, உன் புருஷனால தான் என் புருஷன் வேலை இல்லாம இருக்கின்றார். இதற்கு முத்துத்தான் காரணம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீனாவுடன் சண்டை போடுகின்றார்.
ஆனாலும் மீனா அவர் செய்தது நல்ல காரியம். அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீதாவுக்கு பதிலடி கொடுக்கின்றார். எனினும் முத்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் உன்னுடன் கதைக்க மாட்டேன் என்று சீதா கிளம்பிச் செல்கிறார்.
இறுதியாக முத்து செய்த நல்ல காரியத்தை சங்கம் ஒன்றில் இருந்து வந்து வாழ்த்தியதோடு அவருக்கு பாராட்டு விழாவும் அவோட்டும் கொடுப்பதற்கு பேசிக் கொண்டுள்ளார்கள். ஆனாலும் அது எல்லாம் வேண்டாம் என்று முத்து மறுத்து விடுகின்றார். அத்துடன் மீனா சீதாவுடன் மீண்டும் இணைவதற்காக தான் மன்னிப்பு கேட்பதாக சொல்லுகின்றார். இதுதான் இன்று வெளியான எபிசோட்.
Listen News!