ஹாலிவுட்டில் முக்கிய காமெடி நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்தார். தற்போது கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார்.
இவருடைய நடிப்பில் இறுதியாக பேபி அண்ட் பேபி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த பார்வையாளர்கள் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றார்கள்.
இன்னொரு பக்கம் சமீப காலமாகவே யோகி பாபு ஆன்மீக பயணங்களில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் பேட்டி ஒன்றின் போது நடுவர் ஒருவர் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டி உள்ளதை பற்றி விசாரித்த போது, அது சாமி விஷயம்.. இது தேவையில்லாத கேள்வி என்று சொல்லி நழுவியும் இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் யோகி பாபுவுக்கு ஏதேனும் காயமா என பதறிப் போய் உள்ளனர் .
ஆனாலும் குறித்த விபத்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விபத்தில் எந்தவித காயங்களும் இன்றி யோகி பாபு உயிர் தப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Listen News!