• Jan 22 2026

இரண்டு கல்யாணம், இரண்டு பசங்க.. நான் உள்ள போன திவாகருக்கு பேட் டைம்.! கொந்தளித்த பிரஜின்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன்  இறுதி வாரத்தில் கால் பதித்து உள்ளது.  தற்போது பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாக்ஸ்  நடைபெற்று வருகின்றது. இதில் யார் பணப்பெட்டியுடன் வெளியே கிளம்பப் போகின்றார்கள் என்ற  எதிர்பார்ப்பு  பிக் பாஸ் ரசிகர்களிடையே காணப்படுகின்றது. 

அதே நேரத்தில் பழைய போட்டியாளர்கள்  மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தங்களுடைய பழைய கணக்குகளை தீர்த்து வருகின்றனர்.  அதன்படி ரம்யா ஜோ, வியானா  ஆகியோர் தங்களைப் பற்றி புறம் பேசிய சான்ட்ராவையும் விக்ரமையும்  புரட்டி எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  பிக் பாஸ் 9 போட்டியாளரும் நடிகருமான பிரஜின்  வழங்கியப் பேட்டி வைரலாகி வருகிறது.  அதில் அவர் திவாகரை பற்றி தெரிவித்துள்ளார். 

அதாவது ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அண்ணன் தங்கை உறவாக திவாகரும் பார்வதியும் காணப்பட்டனர்.  தற்போது  சான்ட்ரா விஷயத்தில் பார்வதிக்கும் கமரூதினுக்கும் ரெட்கார்டு கொடுத்த விஷயம் பற்றி பேசி திவாகர் வேதனையை தெரிவித்திருந்தார். மேலும்  தான் ஒரு டாக்டராக சொல்லுகின்றேன் சான்ட்ராவுக்கு பேனிக்   அட்டாக் வரவில்லை அவர் நடிக்கிறார்  என்று குறிப்பிட்டார். 

இவ்வாறான நிலையிலே பிரஜின் திவாகர் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,  திவாகர் ஒன்றும் நல்லவர் கிடையாது. அவருக்கு 38 வயசுன்னு சொன்னார். ஆனா அவருக்கு 38 வயசு இல்ல. அதே மாதிரி கல்யாணம் ஆகாதவன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. அவருக்கு ஏற்கனவே இரண்டு கல்யாணமாகி விவாகரத்து ஆகி இரண்டு பசங்களும் இருக்காங்க. 

இதுக்கெல்லாம் என்கிட்ட ஆதாரம் இருக்கு.  இவரெல்லாம் தகுதி தராதரம் பற்றி பேசலாமா? நான் மட்டும் உள்ள போனால்  அவருக்கு தான் பேட் டைம், உள்ள போனா எல்லாத்தையும் ஆதாரத்தோட சொல்லுவேன்  என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement